Home முக்கியச் செய்திகள் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்

படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்

0

மன்னார் – முத்தரிப்புத்துறை பகுதியில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் குறித்த குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (24) காலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று பிள்ளைகளின் தந்தை

இதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/a-man-dies-getting-caught-in-wind-of-boat-engine-1713953742?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version