Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0

மட்டக்களப்பு (Batticaloa)வாவியின் பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்று (20.04.2024) மீட்கப்பட்டுள்ளது.

பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய
யோகநாதன் கிதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானை தாக்கிய இஸ்ரேலும், சதி செய்யும் அமெரிக்காவும்!! நடந்தது என்ன?

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த
திடீர் மரண விசாரணை அதிகாரி வி.ஆர்.மகேந்திரன் சடலத்தைப் பார்வையிட்டதுடன் பிரதே
பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version