Home இலங்கை சமூகம் கொழும்பை அண்மித்த பகுதியில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்பு!

கொழும்பை அண்மித்த பகுதியில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்பு!

0

கொழும்பை அண்மித்த அதுருகிரிய பிரதேசத்தில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

அதுருகிரிய, கொரதொட்ட பிரதேசத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த சோதனையின் போது, டி-56 ரக துப்பாக்கிகள் மூன்று மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையை அடுத்து மேற்படி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version