Home இலங்கை சமூகம் போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவரின் சொத்துக்கள் அரசுடைமை!

போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவரின் சொத்துக்கள் அரசுடைமை!

0

பிரபல போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவரின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெமட்டகொடை ருவன் மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகிய பிரபல போதைப் பொருள் வர்த்தகர்களின் சொத்துக்களே இவ்வாறு அரசுடைமையாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அதற்கான செயற்பாடுள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

சொத்துக்கள் 

குறித்த போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவரும் போதைப் பொருள் வர்த்தகம் மூலமாக சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுள்ள கட்டிடங்கள், வாகனங்கள், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.

தெமட்டகொடை ருவன் என்றழைக்கப்படும் போதைப் பொருள் வர்த்தகருக்கு சொந்தமான தெமட்டகொடையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் பெறுமதி மட்டுமே 78 கோடி ரூபா என்று கூறப்படுகின்றது.

இவ்வாறாக அவர்கள் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் வாங்கிய சொத்துக்கள் அத்தனையையும் அரசுடைமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.  

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version