பேலியகொட, வெதமுல்ல பகுதியில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (19.08.2025) மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கொலை செய்யப்பட்ட நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் கொழும்பு காவல்துறை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலையில் ஈடுபட்ட சந்தேக நபரைக் கைது செய்ய பேலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
