Home இலங்கை அரசியல் இந்தியாவை போன்ற அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவு: ஆனந்தசங்கரி திட்டவட்டம்

இந்தியாவை போன்ற அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவு: ஆனந்தசங்கரி திட்டவட்டம்

0

இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றாக
வேண்டும் எனவும், அதற்காக எந்த தரப்புடனும் இணைந்து செயற்பட தயாராக
உள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி
தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்
தெரிவிக்கையில்,

”வடக்கிற்கு வந்து 13ஆம் திருத்தம் தீர்வு என கூறும் போது, தெற்கில் இலங்கை
எரியும் என்கிறார்கள். 13ம் திருத்தம், சமஸ்டி எனக் கூறுவதால் தெற்கில்
எதிர்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை அறியாத அரசியல் தலைவர்களாக உள்ளனர்.

அரசியலில் அனுபவம்

இன்று நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் சிலர் தூக்கில் தொங்க வேண்டியவர்களும்,
சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்களுமாக உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் அப்பாவி
உயிர்களை காப்பாற்ற வேண்டியவர்கள், இன்று நினைவேந்தல் செய்கின்றனர்.

கடந்த 4 தடவைகளில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் சட்டவிரோதமானவர்கள்.

நான்
எல்லோரையும் கூறவில்லை. நாடாளுமன்றம் இறைமையை இழந்து பல ஆண்டுகளாகிவிட்டது. வழக்கு தொடர்ந்தாலும் அதை
எதிர் கொள்ள தயாராகவே இதை கூறுகிறேன்.

நாடாளுமன்றம் இறைமை இழந்துள்ளது. அங்கு
இருப்பவர்களில் சிலர் சிறையில் இருக்க வேண்டியவர்கள்.

அரசியலில் அனுபவம் இல்லாதவர்களால் பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயுள்ளது.
தமிழ், சிங்கள அரசியல்வாதிகளில் நான் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி. இன்று
பேசப்படும் அரசியல் தீர்வுகள் தீர்வாகாது” என்றார்.

NO COMMENTS

Exit mobile version