Home உலகம் புலம்பெயர்ந்தோருக்கான கனேடிய நீதிமன்றத்தின் சாதகமான தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான கனேடிய நீதிமன்றத்தின் சாதகமான தீர்மானம்

0

கனடாவில் (Canada) புலம்பெயர்ந்தோரை , குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், ஒன்ராறியோ (Ontario) நீதிமன்றம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர ஒன்ராறியோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சியால் 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் மட்டும், 8,360 புலம்பெயர்ந்தோர் சிலையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டத்தரணிகள் எதிர்ப்பு 

இதன் படி, நீதிபதி பெஞ்சமின் குளுஸ்டீன், புலம்பெயர்ந்தோர், குற்றவாளிகளைப் போல குற்றவாளிகளுடன், கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டு, எங்கும் செல்லவோ, யாரையும் சந்திக்கவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொடூரமான குற்றம் செய்தவர்களுடன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புலம்பெயர்ந்தோர் பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்வதைத் தடுப்பதற்காக அரசு சார்பான சட்டத்தரணிகள் 15 எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவற்றை ஒன்ராறியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version