Home உலகம் அடங்க மறுக்கும் ஹிஸ்புல்லா: இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணையுடன் வெளியிட்ட காணொளி

அடங்க மறுக்கும் ஹிஸ்புல்லா: இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணையுடன் வெளியிட்ட காணொளி

0

இரண்டு நாட்களுக்கு முன்பு டெல் அவிவின் தெற்கே உள்ள ஹட்ஸோர் விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு குரூஸ் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைக் காட்டும் வீடியோவை ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ளது.

எனினும், விமானத் தளத்தின் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.

ஈரானிய ஏவுகணை 

அத்தோடு, இஸ்ரேலிய இராணுவமும் தமது தளத்தின் மீது எந்த தாக்குதல்களும் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லாக்கள் வெளியிட்டுள்ள இந்த காணொளியில் உள்ள க்ரூஸ் ஏவுகணை ஈரானால் உருவாக்கப்பட்ட பாவே ஏவுகணையின் மாறுபாடு என தெரிவிக்கப்படுகிறது.

21 தாக்குதல்கள்

மேலும், லெபனான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது இன்று 21 தாக்குதல்களை ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

இதன் படி, லெபனானில் இருந்து மேற்கு கலிலிக்கு மேல் ஏவப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களை சிறிது நேரத்திற்கு முன்பு எந்த உயிரிழப்பும் இல்லாமல் வீழ்த்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version