Home முக்கியச் செய்திகள் மட்டக்களப்பில் சிங்கள இளைஞர்களைத் தாக்கியது ஒரு சிறைச்சாலை அதிகாரி!!

மட்டக்களப்பில் சிங்கள இளைஞர்களைத் தாக்கியது ஒரு சிறைச்சாலை அதிகாரி!!

0

 தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் தாக்கப்பட்டு, அந்த அலுவலகத்தில் இருந்த தென்னிலங்கை இளைஞர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தது ஒரு சிறைச்சாலை அதிகாரி என்று தெரியவருகின்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமைபுரியும் குழந்தைவேல் நவணீதன் என்ற அதிகாரியே, தென்னிலங்கையில் இருந்து தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான மட்டக்களப்பு வந்திருந்த தேசிய மக்கள் சக்தி இளைஞர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தது தெரியவருகின்றது.

 அந்த சிறைச்சாலை அதிகாரி ரீ.எம்.வி.பி. என்ற பிள்ளையான குழுவின் உறுப்பினர் என்பதுடன், சமூக ஊடகங்கள் வாயிலாக பலரையும் மிரட்டி வருகின்ற ஒருவர் என்றும் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட ந்த நபர் தொடர்பாக சந்திவெளிப் பொலிசாரிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Source: https://ibctamil.com/article/a-prision-officer-involved-in-the-attack-1729675873?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version