முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்து ஒரு சந்தர்ப்பத்தை தரவேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் செவ்வாய்க்கிழமை (15.10.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வந்தோம். ஆனாலும் அவர்கள் எமது கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.
நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
ஆனால், இம்முறை போராளிகள் ஆகிய நாங்கள் வடக்கு கிழக்கிலே உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 போராளிகள் வீதம் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம்.
எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை எங்களுக்கு தான் தெரியும். எனவே முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.