நவராத்திரியை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) எழுதிய பாடல் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கும் வகையில் ‘ஆவதி கலாய்’ என்ற தலைப்பில் கர்பா பாடல் ஒன்றை எழுதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நவராத்திரி தினம்
இந்த பாடல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது நவராத்திரியின் புனித மான நாள். அன்னை துர்கை மீதான பக்தியால் ஒன்றுபட்டு பக்தர்கள் பல்வேறு வகைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘ஆவதி கலாய்’ என்ற தலைப்பில் கர்பா பாடல் ஒன்றை எழுதி உள்ளேன்.
நமக்கு அன்னை துர்கையின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த அக்டோபர் 3 ஆம் திகதி ஆரம்பமான நவராத்திரி விழாவானது உலகம் ழுழுவதும் உள்ள இந்துக்களினால் தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/a-song-written-by-modi-for-navratri-1728411284
