மத்திய கிழக்கில்(middle east) நிலவும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் விலை(fuel price) உயரும் பட்சத்தில் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath),பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அவதானிப்பு அறிக்கையின் அடிப்படையில் உரிய குழு பரிந்துரைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயரும் அபாயம்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலையால், எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் கண்காணிப்பு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், எரிபொருள் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் தலையிட்டு செயல்பட, இந்த குழு முடிவு செய்துள்ளது.
”
இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த எரிபொருள் கட்டண திருத்தத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் மற்றும் பேருந்துகளின் விலைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை போக்குவரத்து கட்டணம்
“எரிபொருள் விலையை அரசு குறைத்துள்ளது, ஆனால் பேருந்து கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை.
எனவே,பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்கள் மற்றும் பேருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளித்து ஒரு நடவடிக்கை எடுக்க இந்த குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/hnetHMS9etM