Home இலங்கை அரசியல் ‘சங்கு’ கொம்பனி லிமிட்டெட்டின் தலைவர் கோத்தாவின் காலில் விழுந்து வணங்கிய கதை தெரியுமா?

‘சங்கு’ கொம்பனி லிமிட்டெட்டின் தலைவர் கோத்தாவின் காலில் விழுந்து வணங்கிய கதை தெரியுமா?

0

‘சங்கு’ கொம்பனி லிமிட்டின் தலைவர் ஊரிலுள்ள ‘செல்வம்’ படைத்தவர்களிடம் எல்லாம் ‘அடைக்கலமாவது’ அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவர் ஒரு தடவை கோத்தாவின் காலில் விழுந்து அடைக்கலமான கதை அண்மையில் தான் வெளியில் வந்திருக்கின்றது.

அதுவும் அவரது ‘குரு’வும், ‘சாமி’யுமான அந்த நபரே இந்த விடயத்தை பிரித்தானியாவில் இருக்கின்ற தனது நண்பர் ஒருவரிடம் கூறிச் சிரித்திருக்கின்றார்.

கோட்டா ஆட்சிக்கட்டில் ஏறியதும், ‘சங்கு’ கொம்பனி லிமிட்டெட்டின் தலைவரை கோத்தாவிடம் அழைத்துச் சென்றிருக்கின்றார் அவரது ‘குரு’வும் ‘சாமி’யும்.

கோத்தாவைக் கண்டதும், ஓடிச்சென்று கோத்தாவின் காலைத் தொட்டுவணங்கி ஆசீர்வாதம் பெற்றிருக்கின்றார் ‘சங்கு’ கொம்பனி லிமிட்டெட்டின் தலைவர்.

‘குரு’-‘சாமி’ ஆடிப் போய்விட்டாராம்.

‘இன்னுடா இந்த தமிழ்ச் சனம் இந்த தலைவனை நம்புது..” என்று தனது நண்பனிடம் கூறி தலையில் அடித்துக்கொண்டாராம் அந்தக் குரு. 

Source: https://ibctamil.com/article/a-tamil-mp-got-blessing-from-gota-1728719501

NO COMMENTS

Exit mobile version