Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவனை தவறான முறைக்குட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவனை தவறான முறைக்குட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்

0

9 வயதுடைய பாடசாலை மாணவனை பல முறை தவறான முறைக்குட்படுத்திய 38 வயதான ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
சம்மாந்துறை (Sammanthurai) நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை (Ampara) மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவனை அப் பாடசாலையில் ஆரம்ப கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று பலமுறை தவறானமுறைக்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்தறை நீதிவான்

பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரினால் 13.11.2024 அன்று காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபரான 38 வயது
ஆரம்ப கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் நேற்றையதினம் (13.11.2024) முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 9 வயது பாடசாலை சிறுவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version