முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவு
கூர்ந்து பூ தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாளினை கரையோர
மாவீரர் நாள் அமைப்பினரால் நேற்றையதினம் (10) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ்,
ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உரித்துடையோர்கள், கரையோர
மாவீரர் நாள் அமைப்பினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை
செலுத்தியிருந்தனர்.
நினைவு கூர்ந்து அஞ்சலி
அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
2025 ஆம் ஆண்டுக்குரிய மாவீரர் தினம் கடலிலே காவியமான மற்றும் கரையோர
மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி உத்தியோக பூர்வமாக
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பல வருடங்களாக இப்பகுதியில் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி
வரப்பட்டதாகவும், தற்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட
சுற்றுலா தளமாக மாற்றமடைந்துள்ளதனால் பிரதேச சபையின் தபிசாளர், செயலாளர்
மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி கடிதத்தையும் வழங்கியிருப்பதாகவும் ஏற்கனவே கடந்த மாதம் அனுமதி கடிதத்தை பிரதேச சபையின்
தபிசாளரிடமும் வழங்கியிருந்தோம்.
ஏற்பாட்டு குழு எனும் வடிவில் இருந்த அமைப்பானது தற்போது கரையோர
மாவீரர் நாள் அமைப்பு என பெரும் திரளான மக்களுடன் கூட்டம் கூடி
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தினம்
கார்த்திகை மாதம் என்றால் மாவீரர்களுக்குரிய காலமாகும் அதனால்
மாவீரர்களுக்குரிய அனைத்து செயற்பாடுகளையும் தூய்மையான மனதோடு செய்ய
வேண்டும் அந்தவகையிலே கடலிலே காவியமான மற்றும் கரையோர
மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி ஆரம்பித்து வைத்திருக்கின்றோம்.
அதனை
தொடர்ந்து ஏனைய பகுதிகளில் எழுச்சி கொடிகளை கட்டி ஆரம்பிக்க இருப்பதாகவும்,
மாவீரர்களை நினைவு கூர்வதற்கு கட்சிகள் தலையிட கூடாது கட்சி பேதங்களை கடந்து
அனைவரும் அணிதிரண்டு வருகைதந்து மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என
மேலும் தெரிவித்தனர்.
