Home இலங்கை சமூகம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள ஐ.எம்.எப் செல்ஃபி

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள ஐ.எம்.எப் செல்ஃபி

0

ஜனாதிபதி செயலகத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பின் முடிவில் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் கடந்த 03ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது இலங்கை அதிகாரிகள் குழுவில் இணைந்திருந்த பொருளாதார துறை பேராசிரியரான நந்தசிறி கீம்பியஹெட்டி எடுத்த புகைப்படமே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.

திட்டம் குறித்து மீளாய்வு 

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர்  நந்தசிறி கீம்பியஹெட்டி மற்றும் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட இலங்கை பிரதான அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்க இடையில் செயற்படுத்தப்படும் தற்போதைய திட்டம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் நோக்கங்களுடன் கொள்கையளவில் அரசாங்கத்தின் பரந்த உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, மக்கள் மீதான சுமையை அகற்றும் மாற்று வழிகளின் ஊடாக அந்த நோக்கங்களை அணுகுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version