யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று(06.10.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பையா சிவனேஷ்வரன் என்ற 42வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ் விசாரணை
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் மனநலம் குன்றிய ஒருவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர் நான்கு தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு
உயிர்மாய்த்திருக்கலாம் என பொலிஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் மிகவும் உருக்குலைந்த
நிலையில் காணப்பட்ட நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில், மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/recovery-of-body-man-in-a-state-of-collapse-jaffna-1728259658
