Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

0

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம்
பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சடலம், இன்று(24.09.2024) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை

குறித்த வீட்டில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர்.  எனினும், கணவன் – மனைவி இருவருக்கும் இடையிடையே தகராறுகள் இடம்பெற்று வருவதாக அயலவர்கள்
தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து
வந்த நிலையில், சம்பவதினமான இன்று(21) தனது மகள் வேலைக்குச் சென்றுள்ளார் என
நினைத்துக் கொண்டு அவரது தாயார் உயிரிழந்த மகளின் தொலைபேசிக்கு பல தடவை
அழைப்பெடுத்த போதிலும், அவரது தொலைபேசி இயங்கவில்லை. 

இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சகோதரன் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது வீடு
பூட்டப்பட்டிருந்தது. எனினும் உயிரிழந்த பெண்ணின் பாதணி வீட்டின் முன்னால்
கிடந்துள்ளன.

சந்தேகம் கொண்ட சகோதரன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு
செய்ததற்கு இணங்க வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று
பார்த்தபோது படுக்கையிலே இரத்தத்தில் தோய்ந்த நிலையில் தனது சகோதரி இறந்த
நிலையில் கிடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த களூவாஞ்சிகுடி பொலிஸார், மட்டக்களப்பு குற்றத்
தடுப்பு பிரிவினர் மற்றும் கைரேகை தடையவியல் பிரிவினர், உள்ளிட்ட பலரும் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி
ஏ.றஞ்ஜித்குமார் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத
பரிசோதனைக்குட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதுடன்
உயிரிழந்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version