Home இலங்கை சமூகம் மகியங்கனையில் காட்டு யானை தாக்கி இளைஞன் பலி

மகியங்கனையில் காட்டு யானை தாக்கி இளைஞன் பலி

0

மகியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மகியங்கனை, பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே மேற்படி சம்பவத்தில்
உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவத்தில் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார் என்று
பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்சிலையில், சடலம் மகியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/a-young-man-attacked-by-an-elephant-1720428018

NO COMMENTS

Exit mobile version