Home முக்கியச் செய்திகள் யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

யாழில்(Jaffna) இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி
தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில், யாழ். கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் அத்துமீறி
உள் நுழைந்த குழு, இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி
தாக்குதல் நடாத்தியது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய் காவல்துறையினர்
தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தேடிவந்த நிலையில் இருவர்
ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவு

இந்த நிலையில், மேலும் ஒரு சந்தேகநபர் நேற்று முன்தினம்(09)காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரை நேற்று(10) நீதிமன்றத்தில்
முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version