Home இலங்கை குற்றம் வவுனியாவில் 67 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய நபர் கைது

வவுனியாவில் 67 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய நபர் கைது

0

வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(4) கைது
செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச்
சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

முறைப்பாடு

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில்
வசித்து வந்தவர்கள் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில்
முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது வவுனிய, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் 33
வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலதிக விசாரணை

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட
விசாரணைகளில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 66 இலட்சத்து 33
ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான 25 அரைப் பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version