யாழில் வன்முறை கும்பல் ஒன்றினால் இளைஞன் ஒருவர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம், நேற்று (31.12.2024) இடம்பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்று வந்த நிலையிலேயே நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது, அந்த கும்பலை சேர்ந்த தரப்பினர் முச்சக்கர வண்டியின் ஒரு சில்லினை தூக்கி ஆபத்தான முறையில் வீதியின் குறுக்கு மறுக்காக வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் குறித்த கும்பலால் வீதியில் நின்ற இளைஞன் ஒருவர் மீது, தலைக்கவசம், கையில் உள்ள பொருட்கள் என்பவற்றை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.