சில நாடுகளுடன், சில விடயங்களில் உடன்பாடு இல்லாத போதும், உள்ளூர் பொருளாதாரத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாக, இலங்கை முழுமையாக சுதந்திரமாகவும் இறையாண்மையுடனும் செயற்பட முடியாதுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தில் பேசிய ஹேரத், சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தை நோக்கி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இலங்கையின் முக்கிய குறிக்கோள் என்று கூறியுள்ளார்.
பொருளாதார சூழ்நிலை
இலங்கை பொருளாதார ரீதியாக திவாலாகி விடும்போது, நாட்டுக்கு பிடிக்காவிட்டாலும், சர்வதேச அரங்கில், நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை பற்றி சிந்திக்காமல் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது.
எனினும், பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால், ஒரு நாடாக நமது சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்க முடியும் என்று ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் ஏற்பட்ட கொள்கைப் பற்றாக்குறையின் விளைவாகவே, இலங்கை இன்று மிகவும் சிக்கலான பொருளாதார சூழ்நிலையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடகன், சுற்றுலாத் துறையில் இலங்கை கடந்த ஆண்டு இறுதிக்குள் 2 மில்லியன் இலக்கை அடைய முடிந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.