Home சினிமா 2 முறை விவாகரத்து.. 60 வயதில் மூன்றாவது காதலை அறிவித்த நடிகர் அமீர் கான்

2 முறை விவாகரத்து.. 60 வயதில் மூன்றாவது காதலை அறிவித்த நடிகர் அமீர் கான்

0

நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது Sitaare Zameen Par என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் Lahore 1947 என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க குவிந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க

காதலை உறுதி செய்த அமீர்

நடிகர் அமீர் கான் இதற்கு முன் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். 2002ல் முதல் மனைவியை விவாகரத்து செய்த அவர் அடுத்து 2005ல் கிரண் ராவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். அவரையும் 2021ல் அவர் விவாகரத்து செய்துவிட்டார்.

தற்போது அமீர் கான் மூன்றாவது காதலையும் உறுதி செய்து இருக்கிறார். கடந்த ஒன்றரை வருடமாக அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

பெங்களூரை சேர்ந்த கெளரி என்பவரை தான் அமீர் கான் காதலிக்கிறாராம். சமீபத்தில் சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோரை அவர் சந்தித்தார்.

“கௌரியை 25 வருடமாக எனக்கு தெரியும். அவர் மும்பையில் இருந்தபோது எதேச்சையாக சந்தித்தோம். தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். தற்போது செட்டில் ஆனதாக உணர்கிறேன்” என அவர் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version