Home சினிமா மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம்.. ஜெயம் ரவி சொன்னது பொய்: ஆர்த்தியின் அம்மா வெளியிட்ட அறிக்கை

மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம்.. ஜெயம் ரவி சொன்னது பொய்: ஆர்த்தியின் அம்மா வெளியிட்ட அறிக்கை

0

நடிகர் ரவி மோகன் சமீபத்தில் பாடகி கெனிஷா உடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு வந்தபிறகு சர்ச்சை கிளம்பியது. ஆர்த்தி – ரவி மோகன் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அவர் வேறொரு பெண் உடன் வந்தது பற்றி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதற்கு பதிலடியாக ரவி மேகன் வெளியிட்ட அறிக்கையும் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது ஆர்த்தியின் அம்மா சுஜாதா தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

ஜெயம் ரவிக்காக ரூ.100 கோடி கடன் வாங்கினேன்

தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை திரு ஜெயம் ரவி அவர்கள் கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில் தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

அடங்கமறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக 100 கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கி இருக்கிறேன்.

அந்த பணத்தில் 25 சதவீதத்தை திரு ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். அதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளது.

இப்பொழுது ஜெயம் ரவி அவர்கள் இந்த் படங்களின் வெளியீட்டின்போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்கான பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன்.

ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் அங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம்..

இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக, அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும்.

ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை.

இவ்வாறு சுஜாதா விஜயகுமார் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.  முழு அறிக்கை இதோ..

NO COMMENTS

Exit mobile version