Courtesy: H A Roshan
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனங்கள் இன்றைய (04.10.2024) தினம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கட்சி உறுப்புரிமை
கொழும்பில் (Colombo) உள்ள ரணில் கூட்டணியின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை அங்கத்துவத்தினையும் ரணில் விக்ரமசிங்க விடம் இருந்து அப்துல்லாஹ் மஹ்ரூப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், அப்துல்லாஹ் மஹ்ரூப், திருகோணமலை மாவட்ட பிரதான வேட்பாளராகவும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.