Home சினிமா தக் லைஃப் படத்தில் கமல் மனைவியாக நடிக்க அபிராமி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தக் லைஃப் படத்தில் கமல் மனைவியாக நடிக்க அபிராமி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

தக் லைஃப்

ரசிகர்களின் ஆரவாரத்துடன் இன்று தக் லைஃப் திரைப்படம் வெளிவந்துள்ளது. கமல் ஹாசன் – மணி ரத்னம் கூட்டணியில் உருவான இப்படத்தை ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து முதல் முறையாக சிம்பு நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அபிராமி வாங்கிய சம்பளம்

இதில் விருமாண்டி படத்திற்கு பின் கமலுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார் அபிராமி. இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க நடிகை அபிராமி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் கமலின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அபிராமி ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/abhirami-salary-for-acting-in-thug-life-movie-1749117695

NO COMMENTS

Exit mobile version