Home இலங்கை அரசியல் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு : சிவில் சமூகம் விடுத்துள்ள வேண்டுகோள்

சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு : சிவில் சமூகம் விடுத்துள்ள வேண்டுகோள்

0

இலங்கையின் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

எனினும், தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு தமக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்குமாறு சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிவில் சமூகத்துக்கும் இடையே நேற்று (26) கலந்துரையாடல் ஒன்ற நடைபெற்றுள்ளது. எனினும் குறித்த  கலந்துரையாடல் நேற்று முன்தினம் (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுத்தேர்தல்

இந்த நிலையில் இந்த கலந்துரையாடலுக்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சென்றிருந்த போதும் சிவில் சமூகம் இக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. எனினும் நேற்று முன்தினம் கலந்துரையாடலுக்கு வருவதாக கூறியிருந்தனர்.

இதேவேளை நேற்றைய கலந்துரையாடலில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் தாம் போட்டியிடுவதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். இதில் சிவில் சமூகத்தினருக்கு ஆட்சேபனையிருக்கவில்லை.

எனினும், பொதுத் தேர்தலில் போட்டியிடுவது, பிரசாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட ஏதாவதொரு நடவடிக்கையை மேற்கொள்வது பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்பதை தீர்மானிப்பதற்கு தமக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தேவையென சிவில் சமூகத்தினர்  வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version