ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்
திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன். இவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.
எல்லா பிளானும் சொதப்பல், அதிரடியில் இறங்கிய குணசேகரன்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து தகவல்கள் உலா வருகிறது. பாலிவுட்டில் தொடர்ந்து பரப்பப்படும் தகவல்களில் ஒன்றாக இதுவும் உள்ளது. இந்த சர்ச்சைக்கு பல முறை இவர்கள் முற்றுப்புள்ளி வைத்தும் கூட தொடர்கிறது.
கடும் கோபத்தில் அபிஷேக்
இந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்து கடும் கோபத்துடன் பேசியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.
அவர் கூறியதாவது, “முன்பு நாங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வோம் என மக்கள் தெரிந்து கொள்ள விரும்பினார்கள். இப்போது நாங்கள் எப்பொழுது விவாகரத்து செய்வோம் என்று பேசுகிறார்கள்.
என் மனைவிக்கு என் உண்மை தெரியும், அவருடைய உண்மை எனக்கு தெரியும்.
எங்கள் வாழ்க்கை குறித்து வரும் பொய்யான வதந்திகள் எங்களை பாதிக்காது. ஆனால், என்னையும் என் குடும்பத்தையும் பற்றி தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என எச்சரித்து பேசியுள்ளார்.
இதன்பின்னாவது ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து பரப்பப்படும் வதந்திகள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
