நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் பாப்புலர் ஆன நடிகை. கடைசியாக அவர் தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. அபிஷேக் குடும்பத்துடன் ஐஸ்வர்யாவுக்கு சண்டை என்பதால் அவர் தனியாக வசிப்பதாகவும் செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அந்த வதந்தி பற்றி அவரகள் இதுவரை எந்த விளக்கமோ, மறுப்போ தெரிவிக்காமல் தான் இருந்தனர். இந்நிலையில் அபிஷேக் பச்சன் இது பற்றி முதல்முறையாக ஒரு பேட்டியில் கோபமாக பேசி இருக்கிறார்.
பொய், குப்பை
தன்னை பற்றி வரும் விவாகரத்து கிசுகிசு முற்றிலும் பொய்யானது, அது manufactured rubbish என கோபமாக அவர் கூறி இருக்கிறார்.
திருமணத்திற்கு முன் எங்கள் திருமணம் எப்போது என பேசினார்கள், அதன்பின் இப்போது விவாகரத்து எப்போது என பேசுகிறார்கள். இதெல்லாம் குப்பை. என்னைப்பற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரியும், அவரை பற்றி எனக்கு தெரியும். மகிழ்ச்சியான குடும்பத்தில் இருக்கிறோம். அது தான் முக்கியம்.
கிசுகிசுவில் உண்மை இருந்தால் தான் அது என்னை பாதிக்கும். என் குடும்பத்தை பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன். இந்த பொய்யை, உருவாக்கப்பட்ட குப்பையை, நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இதோடு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்” என அபிஷேக் கோபமாக கூறி இருக்கிறார்.
