போதைப்பொருள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் இன்னமும் உயிரிழப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார (Shakya Nanayakkara), தென்னிலங்கை ஊடகம் ஒன்று உடனான கலந்துரையாடலில், போதைப்பொருள் பாவனையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் போது, புகையிலை, மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆலோசனை
அவர்களில் புகையிலை பாவனையினால் சுமார் 20,000 பேரும், மது பாவனையினால் 18,000 பேரும், மற்ற போதைப்பொருள் பாவனையினால் சுமார் 2,000 பேரும் உயிரிழக்கின்றனர் என சபையின் தலைவர் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளை 1927 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.