புதிய இணைப்பு
நுவரெலியா – ரம்பொட பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் 19 பேர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா – ரம்பொட பாடசாலைக்கு அருகில் இன்று (14) வான் ஒன்று கவிழ்ந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நுவரெலியா – ரம்பொட பாடசாலைக்கு அருகில் இன்று (14) வான் ஒன்று கவிழ்ந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கரண்டியல்லவில் பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 12 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், விபத்தில் சிக்கியவர்கள் அநுராதபுரம் – ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
https://www.youtube.com/embed/rAZW9fVqXx4
