Home இலங்கை சமூகம் வாகன விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

வாகன விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

0

வாகன விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதிகள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இந்த பணிப்புரை பதில் பொலிஸ்மா அதிபரால் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்பு

இதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அதேநேரம், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களைச் சோதனையிடுவதற்கு ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version