Home சினிமா சூரி கூட நடிக்க OKவா-னு கேக்குறாங்க.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்

சூரி கூட நடிக்க OKவா-னு கேக்குறாங்க.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்

0

மாமன்

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற 16ம் தேதி இப்படம் திரையரங்கில் ரிலீஸாகிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் படக்குழுவினர் முழுமூச்சாக இறங்கியுள்ளனர்.

சரிகமப Li’l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம்

சமீபத்தில் கல்லூரியில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. இதில் சூரி குறித்து கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி பேசியது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்

அவர் கூறியதாவது “நிறைய பேர் என்கிட்ட உங்களுக்கு சூரி கூட நடிக்க ஓகேவா என்று கேட்டாங்க. ஏன் இப்படி கேக்குறீங்க என்று அவங்க கிட்ட நான் கேட்டேன். சூரி சாருடன் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஏனென்றால் அவர் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார்.

அவர் ரொம்ப நேர்மையான மனுஷன். அவர் பண்ற ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை இருக்கு. அவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையிலும் மரியாதை, அன்பு இருக்கு. அதனால் அவருடன் நடிப்பதில் பெருமைதான். உங்க கூட நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சூரி சார்” என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version