Home இலங்கை அரசியல் நடந்து முடிந்த தேர்தலில் அநுர அரசுக்கு இலங்கை முழுவதும் காத்திருந்த அதிர்ச்சி…

நடந்து முடிந்த தேர்தலில் அநுர அரசுக்கு இலங்கை முழுவதும் காத்திருந்த அதிர்ச்சி…

0

குறுகிய காலத்தில் மூன்று தேர்தல்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தி முதல் இரண்டு தேர்தலிலும் பார்க்க இந்த உள்ளூராட்சி தேர்தலில் பெரும் சரிவை எதிர்நோக்கியுள்ளது என்று கனடாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் நேர குணரட்னம் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

“இதன் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஒரு செய்தியையும் கூறியுள்ளனர்.

தங்களின் அதிருப்தியின் ஒரு பக்கமாக மக்கள் தங்களுடைய வாக்குகளை எதிர்கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்கள்.

தமிழர் பகுதியை எடுத்துக்கொண்டால் நாடாளுமன்ற தேர்தலை விட உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கான வாக்குவீதம் அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.

தமிழர் பகுதிகளில் இந்த தேர்தல் ஊடாக தேசிய மக்கள் சக்தி விழுத்தப்பட்டிருக்கின்றதே தவிர ஒழிக்கப்படவில்லை” என குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….

NO COMMENTS

Exit mobile version