Home உலகம் பிரித்தானிய பிரதமர் வீட்டில் திடீரென தீப்பரவல் : தீவிர விசாரணையில் காவல்துறை

பிரித்தானிய பிரதமர் வீட்டில் திடீரென தீப்பரவல் : தீவிர விசாரணையில் காவல்துறை

0

பிரித்தானிய (United Kingdom) பிரதமர் ஸ்டார்மரின் (Keir Starmer) வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தீ விபத்து நேற்றைய தினம் (12.05.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ தகவல்

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தீ விபத்தில் வீட்டின் ஒரு கதவு சேதமடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் பதவியேற்றதிலிருந்து, ஸ்டார்மர் பிரதமரின் அதிகாரப்பூர்வ டவுனிங் இல்லத்தில் வசித்து வருவதனால் பிரதமருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும், தீ விபத்து பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அவசர சேவைகளை பிரதமர் ஸ்டார்மர் நன்றி தெரிவிக்கின்றார். இது ஒரு உயிரின் பாதுகாப்பு தொடர்பான விசாரணையாக இருப்பதால் மேலதிகமாக எதுவும் தெரிவிக்க முடியாது”எனக் கூறப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/jOYHYmih04M

NO COMMENTS

Exit mobile version