Home இலங்கை சமூகம் ஏ9 வீதியில் கோர விபத்து : ஒருவர் கவலைக்கிடம்

ஏ9 வீதியில் கோர விபத்து : ஒருவர் கவலைக்கிடம்

0

கண்டி – யாழ்ப்பாணம்(kandy jaffna) ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை

விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுஸரும் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

Source: https://ibctamil.com/article/accident-on-a9-road-1721475361

NO COMMENTS

Exit mobile version