Home இலங்கை சமூகம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : ஒருவர் பலி!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : ஒருவர் பலி!

0

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார் ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்திற்கான காரணம்

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குருணாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

 இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version