Home முக்கியச் செய்திகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியின் சகா கைது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியின் சகா கைது

0

பாதாள உலக குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஆகிய ரெவுல் குமாரவின் முக்கிய கூட்டாளி என நம்பப்படும் ஒரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதன்போது, ​​சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலதிகமாக போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் ரூ. 20,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய குறிப்பேடு

அத்தோடு, ஹெரோய் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ரகசிய சேமிப்பு இடங்களின் விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர், இது தற்போது பகுப்பாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரெவுல் குமார தற்போது பூஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்றையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version