Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கணக்கு வாக்கெடுப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கணக்கு வாக்கெடுப்பு

0

Courtesy: Sivaa Mayuri

இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதியில் செலவினங்களை ஈடுசெய்வதற்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் கணக்கு வாக்கெடுப்பை (vote on account) நடத்துவதா அல்லது முழுமையான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதா என்பதை அரசாங்கம் பரிசீலிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் 

எனினும் எந்தவொரு புதிய செலவினக் கொள்கைகளையும் உள்ளடக்காத வகையில் கணக்கு வாக்கெடுப்பே நடைமுறைக்குரியதாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள கொள்கைகளை வாக்கெடுப்பு மூலம் தொடர சபையின் ஒப்புதல் கோரப்படும்.

வரவு செலவுத் திட்டம்

இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக கணக்கு வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை  ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், நாடாளுமன்றை எப்போது கலைப்பது என்று ஜனாதிபதி எதிர்பார்க்கிறார் என்பதைப் பொறுத்தே இது அமையும் என்றும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version