Home இலங்கை அரசியல் அநுர ஆட்சியிலும் கேள்விக்குறியாகிய இனப்படுகொலைக்கான பொறுப்புகூறல் !

அநுர ஆட்சியிலும் கேள்விக்குறியாகிய இனப்படுகொலைக்கான பொறுப்புகூறல் !

0

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எந்தவொரு மாற்றத்தையும் காட்டுவதாக தெரியவில்லையென அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் (Nilanthan) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழ் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறுவது தொடர்பில் அநுர என்ன மாதிரியான நிலைபாட்டிலுள்ளார்.

மனித உரிமையின் பேரவை

அநுர ஒரு ஊடகத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விசாரணைகளைத்தான் கேட்கின்றார்களே தவிர தண்டணைகளை அல்ல என உறுதிப்பட தெரிவித்திருந்தார்.

இதிலிருந்து, என்ன தெரிகின்றது குற்றவாளிகளுக்கு தண்டணை வாங்கித்தரவும் அநுர தயாராக இல்லை அத்தோடு அவர் நியமனங்களும் தமிழ் மக்களுக்கு சார்பற்றதாகவே உள்ளது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் தொடர்பான பொறிமுறை விடயத்தில் அநுர மாற்றத்தை காட்டுவாரா ?

மேலும், தமிழ் மக்கள் விவகாரத்தில் அநுரவின் வகிபங்கு, இனப்படுகொலைக்கான பொறுப்பு கூறல், தமிழ் மக்களின் அரசியல் சூழல் மற்றும் இளைஞர்களின் அரசியல் வருகை என்பவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை காண நேர்காணலை பார்வையிடுங்கள் ,

https://www.youtube.com/embed/j_7TAfy5leY?start=492

NO COMMENTS

Exit mobile version