Home இலங்கை அரசியல் ரணில் வகுத்த பாதையில் அநுர செல்வதாக குற்றச்சாட்டு

ரணில் வகுத்த பாதையில் அநுர செல்வதாக குற்றச்சாட்டு

0

Courtesy: Sivaa Mayuri

அரசாங்கம் மக்களின் ஆணையைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வகுத்த பாதையில் செல்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரேமதாச, பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய புதிய திட்டம் வாக்குறுதியளிக்கப்பட்டது.

எனினும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, குடிமக்களுக்கு உறுதியான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சி உறுதி

தேர்தல் பிரசார வாக்குறுதிகளுக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய பிரேமதாச, மின்சார விலை மற்றும் எரிபொருள் விலை குறைப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் பணிபுரிவதை தனது கட்சி ஆதரிக்கும் அதேவேளையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி கட்டமைப்புகளை சீர்திருத்துவதில், தமது கட்சி உறுதியாக உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இயலாமையை காட்டுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version