Home இலங்கை அரசியல் நெருங்கும் தேர்தல்: யாழிலும் புலப்படும் சுமந்திரனின் வித்தைகள்

நெருங்கும் தேர்தல்: யாழிலும் புலப்படும் சுமந்திரனின் வித்தைகள்

0

தேர்தல் நெருங்கி விட்டதால் சுமந்திரனின் வித்தைகள் யாழிலும் (Jaffna) புலப்பட ஆரம்பித்துள்ளன.

34 வருடங்களின் பின்னர் அச்சுவேலி (Achchuveli) வீதி திறக்கப்பட்டமைக்கு தான் அநுர குமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை விடுத்தமையே காரணம் என சுமந்திரனால் கூறப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வீதியை திறக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர், எனினும் அது புறக்கணிக்கப்பட்டே வந்தது. 

அநுர குமார ஆட்சிக்கு வந்ததும் கொழும்பிலுள்ள வீதிகள் திறக்கப்பட் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் (Angajan Ramanathan) ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதமொன்றும் வழங்கப்பட்டது.

இவ்வாறான சில நகர்வுகளின் பின்னரே இந்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,
தமிழர்களின் சமகால அரசியலை நோக்கும் போது வேட்பாளர்கள் அனைவரும் தமிழ் தேசியத்தை பாதுகாப்பது போன்று களமிறங்கியுள்ளார்கள்.

எனினும் தென்னிலங்கை அரசியல் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு குரல் கொடுக்க தயாராகி விட்டார்கள்.

தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) போன்றோர்கள் , தமிழ் தேசிய எதிர்ப்பு நிலையில் துல்லியமாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு…

https://www.youtube.com/embed/yXtgy_ro9_s

NO COMMENTS

Exit mobile version