Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மானம்

பொதுத் தேர்தல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மானம்

0

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress) தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் (Samagi Jana Sandanaya) இணைந்து திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு 

கிண்ணியாவில் நேற்று (27) இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெிரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மத்திய குழுக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், உயர் பீட உறுப்பினர் ஹில்மி முகைதீன் பாவா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Source: https://ibctamil.com/article/acmc-decision-on-sri-lanka-general-election-1727493457

NO COMMENTS

Exit mobile version