Home இலங்கை அரசியல் நாட்டில் மீண்டும் கம் உதாவ திட்டம்

நாட்டில் மீண்டும் கம் உதாவ திட்டம்

0

இலங்கையில் மீண்டும் கம் உதாவ திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் கம் உதாவ வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் வீடமைப்பு அமைச்சராக கடமை ஆற்றிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்டதாகவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அந்தத் திட்டத்தை முன்னெடுக்க தவறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கம் உதாவ வேலைதிட்டம்

தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் வீடுகள் இல்லாத, காணி இல்லாத அனைவருக்கும் கம் உதாவ வேலை திட்டத்தின் ஊடாக நலன்கள் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச உறுதி வழங்கியுள்ளார். 

 

NO COMMENTS

Exit mobile version