Home சினிமா இதுவரை வாழை திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

இதுவரை வாழை திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

0

மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றால் அது கண்டிப்பாக மக்கள் மனதில் இடம்பிடிக்கும் என உறுதியாக ரசிகர்களால் நம்பப்படுகிறது.

பரியேறும் பெருமாள் படத்தில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது வாழை வரை வெற்றிகரமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த வாழை பலருடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

90ஸ் ஹீரோயின் சிவரஞ்சனியை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி, தயாரித்து இருந்தார். மேலும் இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி என பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் வசூல் விவரம் பற்றி பார்க்கலாம்.

வசூல் வேட்டை

வாழை திரைப்படம் வெளிவந்து 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ப்ளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்தும் இப்படத்தின் வசூல் வேட்டை பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version