சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரீந்த ரணசிங்க(Parinda Ranasinghe) (ஜூனியர்) நேற்று முன்தினம் (01) காலை பதில் சட்டமா அதிபராக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய(Jayantha Jayasuriya) முன்பாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம்(Sanjay Rajaratnam) கடந்த 26ஆம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமாகவுள்ள சட்டமா அதிபர் பதவிக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால்(ranil wickremesinghe) பரீந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புகழ்பெற்ற பிரதம நீதியரசரின் புதல்வர்
புகழ்பெற்ற பிரதம நீதியரசர் பரிந்த ரணசிங்கவின் (சிரேஷ்ட) புதல்வரான பரிந்த ரணசிங்க (ஜூனியர்) 30 வருடங்களுக்கும் மேலாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு அதிபர் ரணில்,ஆறுமாத கால சேவை நீடிப்பு வழங்கியிருந்தார்.எனினும் அவரது நியமனம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் தாமாகவே முன்வந்து ஓய்வு பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.