சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றையதினம் (18) அங்கு சென்றுள்ளார்.
பதில் அமைச்சர்
இந்தநிலையில், அவர் நாட்டிற்கு வரும் வரை இடைக்காலமாகச் செயல்பட வைத்தியர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹன்சக விஜேமுனி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சராக உள்ளார்.
