Home முக்கியச் செய்திகள் இலங்கை கிரிக்கெட்டை விரைவில் கைப்பற்றுவோம்: நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி

இலங்கை கிரிக்கெட்டை விரைவில் கைப்பற்றுவோம்: நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி

0

மூன்று மாதங்களில் கிரிக்கெட்டினை அழித்த அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Vithanage) தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “ சிறிலங்கா அதிபர், அமைச்சர்களான அலி அப்ரி (Ali Sabry) , கஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara) உள்ளிட்ட குழுவொன்று கிரிக்கெட் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக குழு ஒன்று நியமித்தது.

அந்த குழுவின் அறிக்கைக்கு என்னதான் நடந்தது என தெரியாது.

இறுதி போட்டி

இந்த ஊழல்வாதிகளை பாதுகாக்கும் ஆலோசகர்கள் குழுவொன்றும் உள்ளது. அந்த ஆலோசகர்களின் தேவைகள் நிமித்தம் இவ்வாறான அனைத்து குழுக்களின் அறிக்கைகளும் ஓரங்கட்டப்பட்டுள்ளன. இது தொடர்பிலும் எமக்கு சந்தேகம் நிலவுகின்றது.

ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando), ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிபராக நியமிக்கப்பட்டது போல இலங்கை கிரிக்கெட் அணியானது பங்களாதேஷுடன் தோல்வியுற்று நெதர்லாந்துடன் வென்று வேறு வழியில் இறுதி போட்டிக்குச் செல்ல கனவு கண்டார்.

ஊழல் வாதிகள்

சரியாக வேலை செய்திருந்தால் ஹரின் பெர்னாண்டோ, ரணில் விக்ரமசிங்க அதிபரானது போல் இலங்கை அணியானது சுப்பர் 8 இற்கு செல்லும் என்று கனவு கண்டிருக்க தேவையில்லை.

நிர்வாகத்தின் ஒழுக்கம் முறையாக இல்லாத போது, வீரர்களின் ஒழுக்கம் குறித்து நிர்வாகத்திற்கு கதைக்க முடியாது.

இந்த விளையாட்டு எல்லாம் இன்னும் மூன்று மாதங்களுக்கு தான் இந்த மூன்று மாதங்களும் முடிந்ததும் கிரிக்கெட்டினை அழித்த ஒவ்வொருவருக்கும் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த இலஞ்ச ஊழல்வாதிகளிடம் இருந்து கிரிக்கெட்டினை கைப்பற்றுவோம்.” என நாம் வாக்குறுதி அளிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version