சட்ட விரோதமான முறையில் சொத்துக்கள் சேர்த்திருப்போருக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்பொழுது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
எதிரான நடவடிக்கை
இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளும்
மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளும்
ஆரம்பமாகியுள்ளது.
இதனடிப்படையில், சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் தமது
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்போருக்கு எதிராக மிக விரைவில்
புலன் விசாரணைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
நேர்மையாக நேர்த்தியாக உழைத்திருந்தால் மாத்திரம் எவரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சட்டவிரோதமான முறையில் தற்பொழுது பலர் குபேரர்கள் ஆகியுள்ளனர்,
அவர்களுக்கு இந்த விடயம் பொருந்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.
